இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி மிரட்டிய சூர்யகுமார் மற்றும் அக்சர் படேல்
இந்தியா-இலங்கை மோதும் இரண்டாவது டி-20யில் இலங்கை அணி, 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது டி-20 போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் எடுத்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க முதலே அதிர்ச்சியை கொடுத்தது தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன்(2), சுப்மான் கில்(5) ஆட்டமிழந்தனர்.3 ஓவர்களில் 3 விக்கெட் என்று தடுமாறிய நிலையில் சூர்யகுமார் யாதவ்(51) மற்றும் அக்சர் படேல்(65) அதிரடி ஆட்டத்தால் சற்று நம்பிக்கையான ஆட்டம் வெளிப்பட்டது.
அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர் இறுதியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது.இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமநிலை செய்துள்ளது.