இந்தியா VS இலங்கை இரண்டாவது ஒருநாள் போட்டி ; டாஸ் வென்ற இலங்கை அணி..!
இந்தியா – இலங்கை இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்றுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி,டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.இந்திய அணியில் எந்த வித மாற்றமும் இல்லை. ஆனால்,இலங்கை பெஞ்ச் உதனா இலங்கை அணியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.அதன்படி,முன்னதாக இருந்த இசுரு உதனாவுக்கு பதிலாக கசுன் ராஜிதா இடம் பெற்றுள்ளார்.
இலங்கை அணி: அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா (வ), பானுகா ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தாசுன் ஷானகா (இ), வாணிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, கசுன் ராஜிதா, துஷ்மந்த சமீரா,லக்ஷன் சண்டகன்.
இந்தியா அணி: பிருத்வி ஷா, ஷிகர் தவான் (இ), இஷான் கிஷன் (வ), மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்.