இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 275 ரன்கள் எடுத்தனர்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இன்று இரு அணிகளுக்கும் இடையே 2-வது ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர். இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடி வந்த மினோட் 36 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்துஇறங்கிய பானுகா ராஜபக் வந்த வேகத்தில் ரன் எடுக்காமல் வெளியேறினார். அடுத்ததாக தனஞ்சய டி சில்வா களமிறங்க சிறப்பாக விளையாடிய அவிஷ்கா பெர்னாண்டோ அரைசதம் விளாசி விக்கெட்டை இழந்தார். அதில் 4 பவுண்டரி , 1 சிக்ஸர் அடங்கும்.
இதனால், இலங்கை அணி 124 ரன்னிற்கு 3 விக்கெட்டை இழந்தனர். பின்னர் மத்தியில் இறங்கிய சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய சரித் அசலங்கா 65 ரன்கள் எடுக்க அடுத்து இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால், இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 275 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் சாஹல், புவனேஷ்வர் குமார் தலா 3, தீபக் சாஹர் 2 விக்கெட்டை பறித்தனர். 276 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…