எப்படி இருந்த டீம் ஆனா இப்போ ..! டி20I கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த இலங்கை ..!
டி20 I : கிரிக்கெட் போட்டிகளில் ஒரு காலத்தில் இலங்கை அணி கொடிகட்டி பரந்ததென்றே கூறலாம். அதிலும் 50 ஓவர் கிரிக்கெட் ஆனாலும் சரி, டி20 ஆனாலும் சரி அல்லது டெஸ்ட் போட்டிகளிலும் கூட அசைக்க முடியாத அணியாக ஒரு சமயம் இலங்கை அணி வளம் வந்தது.
ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற அணிகள் பொறுமையாக பேட்டிங் விளையாடி கொண்டிருந்த வேளையில், அந்த ஒருநாள் போட்டிகளிலும் அதிரடியாக விளையாடலாம் என உலக கிரிக்கெட் அரங்கிற்கு முதல் முறையாக காட்டியது இலங்கை அணி தான்.
தற்போது அப்படி பட்ட இலங்கை அணி சர்வேதேச டி20 கிரிக்கெட் போட்டியில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது சர்வேதச டி20 போட்டிகளில் அதிகமான தோல்விகளை பதிவு செய்த அணியாக தற்போது இலங்கை அணி மாறியுள்ளது. இதில் சூப்பர் ஓவர் உட்பட அதிக தோல்விகளை இலங்கை பெற்றுள்ளது.
இலங்கையில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணியுடன் இதுவரை 3டி20 போட்டிகளில் விளையாடி அதில் மூன்றையுமே தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. அதிலும் நேற்று எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியின் அபார பந்து வீச்சில் தோல்வியை சந்தித்தது.
நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பையிலும் தோல்விகளை சந்தித்து லீக் சுற்றிலே வெளியேறிய இலங்கை அணி தற்போது,இந்தியா அணியுடன் தொடர் தோல்விகளை சந்தித்தன் காரணமாக அதிக டி20 I போட்டிகளை தோற்ற பட்டாணிகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் இலங்கை அணியின் ரசிகர்களும் சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.
சர்வேதச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை சந்தித்த அணிகள் :
- இலங்கை – 105 தோல்விகள்
- வங்கதேசம் – 104 தோல்விகள்
- வெஸ்ட் இண்டீஸ் – 101 தோல்விகள்
- ஜிம்பாப்வே – 99 தோல்விகள்
- நியூஸிலாந்து – 99 தோல்விகள்