#SLvIND: இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்ற இலங்கை..!

Published by
murugan

இலங்கை அணி 39 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே தவான் 13 ரன்களில் வெளியேற பின்னர் சஞ்சு சம்சன் களமிறங்கினார். சஞ்சு சாம்சன், பிருத்வி ஷா இருவரும் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடி வந்த பிருத்வி ஷா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் தாசுன் ஷானகா ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார்.

இதையடுத்து மனிஷ் பாண்டே களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 46 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்த சில நிமிடங்களில்  மனிஷ் பாண்டே 11 ரன்னில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா வந்த வேகத்தில் 4 பவுண்டரி அடித்து 19 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 40 ரன் எடுத்து அவுட் ஆனார்.

பின்னர், இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக இந்திய அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 225 ரன்கள் எடுத்தனர். போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி 47 ஓவராக குறைக்கப்பட்டது. இதனால், இலங்கை அணிக்கு 227 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக  அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மினோட் பானுகா 7 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்து பானுகா ராஜபக்சே, அவிஷ்கா உடன் கூட்டணி அமைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.பானுகா ராஜபக்சே, அவிஷ்கா இருவரும் அரைசதம் விளாசினர். நிதானமாக விளையாடிய பானுகா ராஜபக்சே 65 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய தனஞ்சய டி சில்வா 2 ரன் எடுத்து சேத்தன் சகாரியாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் களம் கண்ட தசுன் ஷானகா ரன் எடுக்காமல் மனிஷ் பாண்டேவிடம் கேட்சை கொடுத்தார். அதிரடியாக விளையாடிய அவிஷ்கா பெர்னாண்டோ 76 ரன்னில் விக்கெட்டை இழக்க இறுதியாக இலங்கை அணி 39 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 227ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்திய அணியில் ராகுல் சாஹர் 3 , சேத்தன் சகாரியா 2,  ஹார்திக் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம்  தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.

நடந்து முடிந்த 3 போட்டியில் 2 போட்டியில் இந்திய அணியும், 1 போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றது. ஆனால், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…

10 hours ago

பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்!

திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…

11 hours ago

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

12 hours ago

அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!

தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…

12 hours ago

பழைய கார் முதல் பாப்கார்ன் வரை! முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் இதோ…

ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…

13 hours ago

ரஷ்யா உயர் கோபுரங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…

ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…

13 hours ago