இந்தியாவை வீழ்த்தி டி 20 தொடரை வென்றதற்காக இலங்கை தேசிய அணிக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பரிசுத்தொகையாக 1,00,000 அமெரிக்க டாலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து,நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனையடுத்து,நடைபெற்ற இரண்டு டி-20 போட்டிகளிலும் இந்தியாவை வீழ்த்தியது,இறுதியில் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 -1 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில்,இந்தியாவுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர் தொடரை வென்றதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ,தேசிய அணிக்கு பெரும் பரிசுத் தொகையை உறுதியளித்தது.ஏனெனில்,அக்டோபர் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் டி 20 தொடரை தற்போது இலங்கை வென்றுள்ளது.வீரர்களின் இத்தகைய சாதனைகளால் ஈர்க்கப்பட்ட கிரிக்கெட் வாரியம் 1,00,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,எஸ்எல்சி ஒரு அறிக்கையில் கூறியதாவது:”இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரின் போது மைதானத்தில் சிறந்து விளங்கியதற்காக தேசிய கிரிக்கெட் அணிக்கு இலங்கை கிரிக்கெட் அணி வாழ்த்து தெரிவிக்கிறது. குறிப்பாக,இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.இந்த வெற்றி மிகவும் அவசியமாது, எனவே,வெற்றியை அங்கீகரிப்பதற்காக, இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு தேசிய அணிக்கு 1,00,000 அமெரிக்க டாலர்களை வழங்க முடிவு செய்துள்ளது,என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோததின. இந்தப் போட்டி…
கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. …
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் …
சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : 'எந்திரன்' திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில்…