சதம் விளாசிய ரோஹித் , கே.எல் ராகுல் ! இலங்கை அணியை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா!
இன்றைய முதல் போட்டியில் இந்திய அணியும் , இலங்கை அணியும் மோதியது. இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன ,குசல் பெரேரா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். பின்னர் கேப்டன் திமுத் கருணாரத்ன 10 ரன்களுடன் வெளியேற அவிஷ்கா பெர்னாண்டோ களமிறங்கினர்.
நிதானமாக விளையாடிய குசல் பெரேரா 18 ரன்னில் அவுட் ஆனார்.பின்னர் இறங்கிய குசால் மெண்டிஸ் 3 , அவிஷ்கா 20 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தனர். இலங்கை அணி 12 ஓவரில் 4 விக்கெட்டை பறிகொடுத்து பரிதாப நிலையில் இருந்தது .
இந்நிலையில் மத்தியில் இறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் , லஹிரு திரிமன்னே இருவரும் கூட்டணியில் இணைந்து அதிரடியான ஆட்டத்தை காட்டினர். ஏஞ்சலோ மேத்யூஸ் சிறப்பான ஆட்டத்தால் அரைசதம் அடித்த சில ஓவரில் தனது சதத்தையும் நிறைவு செய்தார்.
இறுதியாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 264 ரன்கள் எடுத்தது. இந்திய அணி பந்து வீச்சில் பும்ரா 3 விக்கெட்டை பறித்தார்.265 ரன்கள் இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் , கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கியத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் , கே.எல் ராகுல் அணியின் ரன்களை குவித்தனர்.வழக்கம் போல ரோஹித் தனது அதிரடி ஆட்டத்தை காட்டினர். இப்போட்டியில் ரோஹித் 111 பந்தில் 103 ரன்கள் குவித்தார்.அதில் 9 பவுண்டரி , 1 சிக்ஸர் விளாசினார்.
இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ரோஹித் தொடர்ந்து 3 போட்டிகளில் சதம் விளாசி உள்ளார்.அடுத்த வீரராக கேப்டன் கோலி களமிறங்கினர். நிதானமாகவும் , அதிரடியாகவும் விளையாடி வந்த கே.எல் ராகுல் சதம் அடித்தார். இந்நிலையில் 42 -வது ஓவரில் மலிங்கா வீசிய வேகப்பந்தில் கே.எல் ராகுல் 111 ரன்களுடன் வெளியேறினர். களத்தில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் கோலி 34 , ஹர்திக் பாண்டிய 7 ரன்களுடன் நின்றனர்.
இறுதியாக இந்திய அணி 43.3 ஓவர் முடிவில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.