விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
டெஸ்ட் தொடரில் கோட்டை விட்ட இலங்கை அணி, இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், டெஸ்ட் தொடரில் இலங்கை தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில், விட்டதை பிடிக்கும் வகையில், இன்று கொழும்பில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இலங்கையின் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கிய முதல் ஒரு நாள் போட்டியில், இலங்கை நிர்ணயித்த 215 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 33.5 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இலங்கை அணியின் ஆட்ட நாயகன் சரித் அஸ்லங்கா, 126 பந்துகளில் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பந்து வீச்சைப் பொறுத்தவரை, மகேஷ் தீஷ்னா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர்.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் ஜான்சனால் நிஸ்ஸங்கா ஆட்டமிழந்தார். அவரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்தபடியாக குசல் மெண்டிஸ் 19 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அதன் பின் கமிந்து மெண்டிஸ் ஐந்து ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதன் காரணமாக, வெறும் 55 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து நின்ற இலங்கை அணியை அசலங்கா பொறுப்பேற்றுக் கொண்டு சதம் அடித்து அதிரடி காட்டினார். அவர் 126 பந்துகளில் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது இன்னிங்ஸில் அவர் 14 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களை அடித்தார்.
215 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி, முதலில் களமிறங்கிய அலெக்ஸ் கேரி அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். இது தவிர, ஆரோன் ஹார்டி 32, சீன் அபோட் மற்றும் ஆடம் ஜம்பா 20-20 ரன்கள் எடுத்தனர். ஸ்டீவ் ஸ்மித் 12 ரன்களும், மார்னஸ் லாபுசாக்னே 15 ரன்களும் எடுத்தனர். மேத்யூ 0 மற்றும் ஜாக் ஃபேஜர் மெக்கர்க் 2 மற்றும் கூபே கானொலி 3 என ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அந்த வகையில், இலங்கை அணி சார்பாக மகேஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அசித பெர்னாண்டோ மற்றும் துனித் வெலலகே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வனிந்து ஹசரங்கா மற்றும் சரித் அசலங்கா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இறுதியில் 33.5 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா அணி.
லேட்டஸ்ட் செய்திகள்
எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!
March 15, 2025