ஆசியக் கோப்பைக்கான அணியை அறிவித்தது இலங்கை! 4 முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை!

Sri Lanka squad

ஆசியக் கோப்பை 2023 (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய தொடரில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறுகிறது. நாளை முதல் செப்டம்பர் 17 வரை ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. நாளை பாகிஸ்தானில் முல்தானில் உலக நம்பர் 1 ஒருநாள் அணியான பாகிஸ்தான், நேபாளத்தை எதிர்கொள்கிறது.

இந்த ஆண்டு ஆசிய கோப்பை ‘ஹைப்ரிட் மாடலில்’ பாகிஸ்தானும், இலங்கையும் இணைந்து போட்டிகளை நடத்துகின்றன. இந்த தொடரில் 6 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் 2 அணிகள் சூப்பர் ஃபோர் நிலைக்கு முன்னேறும். இந்த கட்டத்தைத் தொடர்ந்து, சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். குழு A-வில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் அணிகளும், குரூப் B-யில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும் உள்ளன.

இதனிடையே, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளை தவிர, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளின் வீரர்கள் பட்டியல் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், நாளை ஆசிய கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆசியக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இலங்கை அறிவித்தாலும், முக்கிய பந்துவீச்சாளர்கள் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லெக் ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க உட்பட நான்கு முக்கிய இலங்கை வீரர்கள் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மந்த சமீர, லஹிரு மதுஷங்க மற்றும் லஹிரு குமார ஆகியோரும் காயம் காரணமாக ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பெறவில்லை.

காயமடைந்த வீரர்களுக்கு பதிலாக பினுர பெர்னாண்டோ மற்றும் பிரமோத் மதுஷன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ODI அணிக்கு திரும்பிய குசல் பெரேரா, காய்ச்சலில் இருந்து இன்னும் மீண்டு வருவதாகவும், அவர் குணமடைந்தவுடன் மற்ற அணியுடன் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, நாளை ஆசியக் கோப்பையில் இலங்கையின் முதல் போட்டி ஆகஸ்ட் 31-ம் தேதி பல்லேகலேயில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

இலங்கை அணி: தசுன் ஷனக (கேப்டன்), பதும் நிசானக, திமுத் கருணாரத்ன, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, மதீஷா பத்திரன, கஸ் ஹேம் பத்திரன, , பினுர பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்