“நான் தான் இங்க கேப்டன்..,” மேக்ஸ்வல் செயலால் நடுவரிடம் டென்ஷன் ஆன ஷ்ரேயஸ் ஐயர்!
நேற்று SRH - PBKS அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் SRH பேட்டிங் செய்யும் போது பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸிடம் கேட்காமல் கள நடுவர் DRS முறைக்கு சென்றது குறித்து ஷ்ரேயஸ் அதிருப்தியை வெளிக்காட்டி உள்ளார்.

ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும் விளையாடின. இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஒரு சர்ச்சைக்குரிய DRS (Decision Review System) சம்பவம் நிகழ்ந்தது, இதில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் சற்று கோபமடைந்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2வதாக பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது, 5வது ஓவரில் (4.2வது பந்து) பஞ்சாப் வீரர் கிளென் மேக்ஸ்வெல் பந்து வீசினார். அப்போது ஒரு பந்து பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த ட்ராவிஸ் ஹெட் பேட்டை தொட்டு பஞ்சாப் விக்கெட் கீப்பர் பிரப்சிம்ரன் சிங்கால் பிடிக்கப்பட்டதாகக் கருதி கத்தினார். ஆனால், கள நடுவர் அந்தப் பந்தை “வைடு” (wide) என்று அறிவித்தார். இதனால் மேக்ஸ்வெல் உடனடியாக DRS கேட்டு சைகை செய்தார். வழக்கமாக, DRS கோரிக்கைகள் அணியின் கேப்டனின் ஒப்புதலுடன் மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், இந்த முறை கள நடுவர், ஷ்ரேயஸ் ஐயரிடம் அணுகாமல் நேரடியாக 3வது நடுவருக்கு (third umpire) DRS-ஐ அனுப்பினார்.
இது ஷ்ரேயஸ் ஐயருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர் உடனடியாக கள நடுவரிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். கேமராக்களில் பதிவான காட்சிகளின்படி, ஷ்ரேயஸ், “நான் தான் கேப்டன், முதலில் என்னிடம் கேளுங்கள்” என்று கூறியதாகத் தெரிகிறது. அவர் தனது அதிருப்தியை களத்தில் வெளிப்படையாகக் காட்டினார், ஏனெனில் கேப்டனாக களத்தில் அவரது அதிகாரம் மீறப்பட்டதாக உணர்ந்தார்.
3வது நடுவரின் மதிப்பாய்வில், பந்து ட்ராவிஸ் ஹெட்டின் பேட்டைத் தொடவில்லை என்பது உறுதியானது. மேலும் டிராவில் ஹெட் ஆட்டமிழக்கவில்லை என தீர்ப்பு அளித்துள்ளார். இந்த போட்டியில் பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்திருந்தது. அதனை ஹைதராபாத் அணி 18.3 ஓவரிலேயே சேஸ் செய்து 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. SRH அணி 6-ல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 8வது இடத்தில் உள்ளது. PBKS அணி 5-ல் 3இல் வெற்றி பெற்று 6வது இடத்தில் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா? முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன்!
April 14, 2025
இதுதான் நட்பு! சட்டையை விட உயிர் முக்கியம்., மின்னல் வேகத்தில் பறந்த ‘அஜ்மல்’ ஆம்புலன்ஸ்!
April 14, 2025