#SRHvRR: சஞ்சு சாம்சன் அதிரடி.. ராஜஸ்தான் அணி 164 ரன்கள் குவிப்பு!
ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 164 ரன்கள் குவிப்பு.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இன்றைய 40வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கிய நிலையில், லூயிஸ் 6 ரன்களில் ஆட்டமிழக்க, நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 36 ரன்கள் அடித்து வெளியேறினார். இவர்களை தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 82 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார்.
இதனிடையே, லியாம் லிவிங்ஸ்டோன் 4 ரன்களில் பெவிலியன் திரும்ப, மஹிபால் லோமோர் டக் அவுட்டானார். இறுதி கட்டத்தில் மஹிபால் லோமோர் மற்றும் ராகுல் திவாட்டியா களத்தில் இருந்த நிலையில், லோமோர் 28 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து. இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 165 ரன்கள் அடித்தால் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யும். ஹைதராபாத் பந்துவீச்சை பொறுத்தளவில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.