ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற ஹைதராபாத்-பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14-ம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்கத்திலே சொதப்பிய பஞ்சாப் அணி, அடுத்தடுத்த விக்கெட்களை இழந்துகொண்டே வருகிறது.
இறுதியாக பஞ்சாப் அணி, 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 120 ரன்கள் எடுத்தது. 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பைர்ஸ்டோவ்-டேவிட் வார்னர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரின் கூட்டணியில் உயர, 37 ரன்கள் குவித்து டேவிட் வார்னர் தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், பைர்ஸ்டோவுடன் இணைந்து சிறப்பாக ஆடினார்.
இறுதியாக பைர்ஸ்டோவின் அரைசதத்தால் ஹைதராபாத் அணி, 121 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியின்மூலம் பஞ்சாப் அணி, ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…