ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, தனது 100-வது வெற்றியை பதிவு செய்தது.
14-ம் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் கொல்கத்தா அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் முதல் போட்டியிலே வென்ற அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் தொடரின் புதிய சாதனையை கொல்கத்தா அணி படைத்துள்ளது. இதுவரை 99 போட்டிகளில் வெற்றியும், 84 போட்டிகளில் தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணி, இந்த போட்டியின்மூலம் தனது 100-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலின் முதல் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாம் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கின்றது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…