SRHvDC : 300 அடிக்குமா ஹைதராபாத்? கடப்பாரை பேட்டிங்கின் அதிரடியை சமாளிக்குமா டெல்லி?
இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகிறது.

விசாகப்பட்டினம் : கடந்த ஆண்டு எப்படி அதிரடியாக ஹைதராபாத் அணி விளையாடியதோ அதைப்போல தான் இந்த சீஸனும் விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் இந்த தொடரில் அவர்களது முதல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 286 ரன்கள் குவித்தது மட்டுமின்றி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதனைத்தொடர்ந்து அடுத்தது லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அதிரடி காட்ட தவறியதுடன் தோல்வியும் அடைந்தது.
அந்த தோல்வியை தொடர்ந்து இன்று டெல்லி அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா கிரிக்கெட் மைதானத்தில் விளையாடவுள்ளது. ஏற்கனவே, லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் பயிற்சியாளர் ஜேம்ஸ் பிராங்க்ளின் “ஐபிஎல் 2025 தொடரில் ஒரு புதிய வரலாறு படைக்கப்படலாம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த சந்திப்பின் போது உங்கள் அணி அதிகபட்ச ஸ்கோர்களை அடித்து வருகிறது 300 ரன்கள் அடிக்குமா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில் அளித்த ஜேம்ஸ் பிராங்கிளின் ” நிச்சியமாக ஆமாம், ஏன் முடியாது?” எங்களுடைய அணியில் பேட்டிங் பலம் மிகவும் அபாரமானதாக உள்ளது. எனவே அடிப்போம்” என எதிரணிக்கு எச்சரிக்கை விடும் வகையில், ஜேம்ஸ் பிராங்க்ளின் தெரிவித்திருந்தார்.
எனவே, அவர் பேசியது வைத்தும் ஹைதராபாத் தோல்வியில் இருந்து வருவதால் இப்போது டெல்லி அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் நிச்சயம் அதிரடியாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சியாளர் மட்டுமின்றி அணியில் இருக்கும் சில வீரர்கள் கடந்த ஆண்டிலிருந்தே 300 அடிக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை என்பது போல தெரிவித்து வருகிறார். எனவே, இன்று நடைபெறவுள்ள போட்டியில் என்ன நடக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஹதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் பார்மில் இருப்பதாலும், அவர்களை சமாளிக்கும் அளவுக்கு மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், அக்சர், மோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்களும் டெல்லி அணியில் இருப்பதால் போட்டி நிச்சயம் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.