#IPL2022: அதிரடியாக ஆடிய ஹைதராபாத்.. முதல் தோல்வியை சந்தித்த குஜராத்!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 21-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. மும்பை DY பட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – கேன் வில்லியம்சன் களமிறங்கினார்கள். இவர்களின் கூட்டணி நிதானமாக தொடக்கத்தை கொடுக்க, அபிஷேக் ஷர்மா சிறப்பாக ஆடத் தொடங்கினார். 42 ரன்கள் கொடுத்து அவர் தனது வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய நிகோலஸ் பூரண் சிறப்பாக ஆடினார். retirement முறையில் அவர் வெளியேற, அவருக்கு பதில் ஐடென் மார்க்ரம் களமிறங்கினார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த கேன் வில்லியம்சன் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியாக ஹைதராபாத் அணி, 19.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி மூலம் தனது முதல் தோல்வியை சந்தித்த குஜராத் அணி, புள்ளிப்பட்டியலில் பின்னடைவை சந்தித்து, 4-ம் இடத்தை பெற்றது.