ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – கேன் வில்லியம்சன் களமிறங்கினார்கள்.
மெதுவாக ஆடிவந்த அபிஷேக் சர்மா 3 ரன்கள் எடுத்து வெளியேற, அவரையடுத்து ராகுல் திரிபாதி களமிறங்கினார். அவருடன் கேன் வில்லியம்சன் இணைந்து சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 17 ரன்கள் எடுத்து வில்லியம்சன் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஏய்டன் மார்க்கம் ராகுல் திரிபாதியுடன் இணைந்து அதிரடியாக அடிவர, அணியின் ஸ்கொர் உயர்ந்தது.
இறுதியாக 71 ரன்கள் எடுத்து ராகுல் திரிபாதி தனது விக்கெட்டை இழக்க, 17.5 ஓவர்களில் 3 விக்கெட் எடுத்து 176 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்றாலும், புள்ளிப்பட்டியலில் 7-ம் இடத்திற்கு பின்னுக்கு வந்தது. ரன்-ரேட் காரணமாக ஹைதராபாத் அணி, பின்னுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க.…
சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில்…
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஒருவருக்கும் இடையே பார்க்கிங்…
சென்னை :காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.…
சென்னை : தங்கம் விலை இன்று (ஏப்.4) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து…