அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!
நேற்று, மும்பைக்கு எதிராக SRH அணி 300 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 162 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களை பெற்றுமளவு ஏமாற்றமடைய செய்தது.

மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. SRH அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. இதை மும்பை அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து எட்டியது.
300 ரன்கள் எதிர்பார்ப்பு
கடந்த சீசனில் ஆக்ரோஷமாக விளையாடிய ஹைதராபாத் அணி , இந்த வருடமும் அதேபோல ஆக்ரோஷமான தொடக்கத்தை அளித்தது. முதல் போட்டியிலேயே ராஜஸ்தான் அணிக்கு எதிராக 286 ரன்கள் எடுத்து 44 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அடுத்து ஏப்ரல் 12-ல் 246 ரன்கள் எனும் இலக்கை 18.3 ஓவரில் எட்டி வெற்றி பெற்றது. 7 போட்டிகளில் மேற்கண்ட 2 போட்டிகளில் மட்டுமே SRH அணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த வருடம் போல இந்த வருடமும் ஆக்ரோஷமாக விளையாடும் என எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
SRH அணியின் முன்னாள் பயிற்சியாளர் டேல் ஸ்டெய்ன் தனது சமூக வலைதளபக்கத்தில், ஏப்ரல் 17 அன்று, ஐபிஎல் வரலாற்றில் முதல் 300 ரன்கள் இலக்கு அடிக்கப்படலாம் என கணித்திருந்தார். டேல் ஸ்டெய்னின் அந்த பதிவு ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக மாறியது. .
தடுத்து நிறுத்திய MI பந்துவீச்சாளர்கள் :
ஆனால், வான்கடே மைதானத்தின் ஆடுகளம் மும்பை பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால் SRH அணியின் அதிரடி தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் (28 ரன்கள், 29 பந்துகள்) மற்றும் அபிஷேக் ஷர்மா (40 ரன்கள், 28 பந்துகள்) வழக்கமான வேகத்தில் ரன்கள் குவிக்க முடியவில்லை. இதற்கிடையில், மும்பை ஆல் ரவுண்டர் வில் ஜாக்ஸ் 3 ஓவர்கள் பந்துவீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். போல்ட், பாண்டியா ஆகியோரும் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இறுதியில் SRH வீரர் ஹென்ரிச் கிளாசென் (37 ரன்கள்) மற்றும் அனிகேத் வர் (18 ரன்கள், 8 பந்துகள்) ஆகியோரின் பங்களிப்பால் மட்டுமே SRH அணி 162 ரன்களை எடுத்தது.
SRH ரசிகர்களின் விமர்சனம்
SRH அணியின் சமீபத்திய இந்த மந்தமான ஆட்டங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 300 ரன்கள் எடுக்கும் ஆற்றல் கொண்ட அணியாக தற்போதும் பார்க்கப்படும் SRH அணி நேற்றைய போட்டியில் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. குறிப்பாக SRH அணியின் முன்னாள் பயிற்சியாளர் டேல் ஸ்டெய்னின் 300 ரன்கள் பதிவை குறிப்பிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.
SRH சறுக்கல்கள் :
டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மாவின் மெதுவான ஆட்டம் அணியின் ரன் வேகத்தை குறைத்தது. குறிப்பாக ஹெட்டின் ஸ்ட்ரைக் ரேட் 100-ஐ விட குறைவாக இருந்தது. முந்தைய போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை எளிதாக எட்டிய SRH, இந்தப் போட்டியில் மிடில் ஓவர்களில் தடுமாறியது. ஆடுகளத்தின் தன்மை மற்றும் MI-யின் பந்துவீச்சு திட்டமிடல் SRH அணியின் வேகத்தை பெருமளவு கட்டுப்படுத்தின. SRH பேட்ஸ்மேன்கள் தங்களை சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவில்லை என்றும் கூறப்டுகிறது. கிளாசன் இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடி இருந்தாலும், மற்ற முக்கிய வீரர்கள் குறைவான ரன்கள் எடுத்ததால் SRH அணி பெரிய இலக்கை பெற முடியவில்லை.