ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது.
ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் 61-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிவருகிறது. புனே MCA மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக வெங்கடேஷ் ஐயர் – ரஹானே களமிறங்கினார்கள்.
இதில் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழக்க, அவரையடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா, சிறப்பாக ஆடி 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க, 28 ரன்கள் எடுத்து ரஹானே தனது விக்கெட்டை இழக்க, சாம் பில்லிங்ஸ் களமிறங்கினார். 5 ரன்கள் எடுத்து ரிங்கு சிங் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய ரசல், 28 பந்துகளுக்கு 49 ரன்கள் அடித்து அசத்தினார்.
இறுதியாக கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அதனை கருத்தில் கொண்டு அதிரடியாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…