#IPL2022: டெத் ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்திய உம்ரான் மாலிக்.. ஹைதராபாத் அணிக்கு 152 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் தொடரில் சூப்பர் சண்டே ஆன இன்று பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகிறது. DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணியில் காயம் காரணமாக மயங்க அகர்வால் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக இன்று அணியின் கேப்டனாக ஷிகர் தவான் பொறுப்பேற்றார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் – ப்ரப்சிம்ரன் களமிறங்கினார்கள். நிதானமான தொடக்கத்தை தொடங்கிய தவான், 8 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
அவரையடுத்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ 12 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேற, லிவிங்ஸ்டன் களமிறங்கினார். மறுமுனையில் 11 ரன்கள் எடுத்து ஜிதேஷ் சர்மா வெளியேற, அவரையடுத்து சிறப்பாக ஆடிவந்த ஷாருக்கான், 26 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் பஞ்சாப் அணி, 19 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் எடுத்தது. அதன்படி கடைசி ஓவரை உம்ரான் மாலிக் வீசினார். இரண்டாம் பந்திலே ஓடியன் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்த, 4,5 மற்றும் 6-வது பந்துகளில் ஹட்-ட்ரிக் விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். கடைசி ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காமல், 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இறுதியாக பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்கள் எடுத்தது. தற்பொழுது 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது.