132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது.
ஐபிஎல் தொடர் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் பிளே-ஆப் 2-வது சுற்றில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – படிக்கல் களம் இறங்கினார்கள். 6 ரன்களில் விராட் கோலி தனது விக்கெட்டை இழக்க, அதிரடி வீரர் படிக்கல், ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். பின்னர் சிறப்பாக ஆடிய பின்ச் 32 ரன்கள் அடித்து மைதானத்தை விட்டு வெளியேற, ஒரே ஒரு ரன் மட்டும் அடித்து மொயின் அலி தனது விக்கெட்டை இழந்தார்.
மத்தியில் டிவில்லியர்ஸ் அபாரமாக ஆட, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் குவித்தது. 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கி, விளையாடி வருகிறது.
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…