யார் இந்த ஸ்ரேயஸ் கோபால்? கோலி, டிவில்லியர்ஸ் என இரண்டு ஜாம்பவான்களையும் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் யார்?
- கடந்த 2014 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார் ஆனால் பெரிதாக அந்த அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை
- அதன் பின்னர் 2018 ல் இருந்து ராஜஸ்தான் அணிக்காக ஆடி வருகிறார்
ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பெரிதாக முகம் தெரியாத 25 வயதான ஸ்ரேயஸ் கோபால் ராஜஸ்தான் அணிக்காக களம் இறங்கினார். முகம் தெரியாத வீரர் என்று நினைத்த பெங்களூர் அணிக்கு பெரும் தலைவலியாக அமைந்தர். இவர் 4 ஓவர்கள் மட்டுமே வீசிய இவர் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை தூக்கினார்.
பெங்களூரு அணியின் கேப்டன் ஜாம்பவான் விராட் கோலியை கிளீன் போல்ட் ஆக்கினார், அதன் பின்னர் மற்றுமொரு ஜாம்பவான் டிவில்லியர்சை கேட்ச் பிடித்து வெளியேறினார். அதற்கடுத்து வந்த ஹெட்மியர் என்னும் வெஸ்ட் இண்டீஸ் வீரரை அழகாக கீப்பர் கேட்ச் கொடுக்க வைத்து வெளியேற்றினார். இப்படி மூன்று பேட்ஸ்மேன்களைம் அற்புதமாக தூக்கியதனால் ராஜஸ்தான் அணிக்கு வெற்றி மிகவும் எளிதாகிறது.
ஆனால் யார் இவர் தெரியுமா? இவர் உண்மையில் கர்நாடகாவைச் சேர்ந்தவர் . இவரது முழுப்பெயர் ராமசுவாமி ஸ்ரேயஸ் கோபால் என்பதாகும். கர்நாடக அணிக்காக அனைத்து வகையான கிரிக்கெட்டும் ஆடியுள்ள இவர் கடந்த 2014 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.
ஆனால் பெரிதாக அந்த அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின்னர் 2018 ல் இருந்து ராஜஸ்தான் அணிக்காக ஆடி வருகிறார். 2018 ல் இந்திய ஏ அணிக்காவும் ஆடியுள்ளார். இவரது தந்தை ராமசாமி 20 வருடங்களாக கிளப் அணிக்காக ஆடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தாயார் அமிதா ஒரு வாலிபால் வீராங்கனை ஆவார்.