இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. பின்னர் நீதிபதி டி .கே ஜெயின் 7 ஆண்டுகள் தடை விதித்தார். இதை அடுத்து அடுத்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி உடன் தடை முடிவடைகிறது.
இந்நிலையில் கேரளா கொச்சினில் ஸ்ரீசாந்த் வீடு உள்ளது. திடீரென இன்று அதிகாலை 2 மணிஅளவில் அவரது வீட்டின் படுக்கையறை மற்றும் வரவேற்பு அறையில் தீ பிடித்தது.
தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைந்தனர். வீட்டில் தீ பிடித்தபோது ஸ்ரீசாந்த் வீட்டில் இல்லை , அவரது மனைவியும் , குழந்தை மட்டுமே இருந்து உள்ளனர்.
தீயை உடனடியாக அணைத்ததால் அவர்கள் இருவரும் உயிர்பிழைத்தனர்.தீ எப்படி பிடித்தது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…