Rohit Sharma : ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் சி சுமை இல்லை எனவே ஆரஞ்சு தொப்பியை எடுக்கலாம் என முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். இதுவரை அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா மும்பை அணியில் வீரராக விளையாடி வருகிறார். இந்நிலையில், நடப்பாண்டில் அவர் ஆரஞ்சு தொப்பியை வாங்க முயற்சி செய்யவேண்டும் என முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ” கிரிக்கெட்டின் உலகில் ரசிகர்கள் கடவுள் என்று அலைக்கு சச்சின் டெண்டுல்கர் எம்.எஸ். தோனி கீழ் விளையாடுவதை நீங்களே பார்த்திருப்பீர்கள். அப்படி தான் ஒரு முறை நாங்கள் உலகக் கோப்பையையும் வென்றோம். புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் கீழ் ரோஹித் சர்மா விளையாடுவதைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இதனை எல்லாம் ரோஹித் சர்மா தனது எண்ணத்தில் எடுத்துக்கொள்ள எனக்கு தெரிந்து வாய்ப்பு மிகவும் குறைவு. என்னை பொறுத்தவரை ரோஹித் கேப்டனாக இருந்த போது அவருக்கு கேப்டன்சி சுமை இருந்தது. இப்போது அவருக்கு அந்த சுமை இல்லை எனவே. சுதந்திரமாக பேட்டிங் செய்ய அவரும் விரும்புவார் நானும் அதை தான் விரும்புகிறேன்.
கண்டிப்பாக அவர் சுதந்திரமாக விளையாடி இந்த ஆண்டில் ஆரஞ்சு தொப்பியையும் எடுக்கவேண்டும். அப்படி தான் அவருடைய ஆட்டங்களும் வருகின்ற போட்டிகளில் இருக்கவேண்டும். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை முன்னோக்கி வழிநடத்தினார், ஆனால் நான் உறுதியாக நம்புகிறேன். மும்பை இந்தியன்ஸை பின்னால் இருந்து வழிநடத்தப் போகிறார்” எனவும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். மேலும்.மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்ததாக வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…