நம்பிக்கையை இழக்கவில்லை -ஐபிஎல் இறுதிப் பட்டியலில் இடம் பெறாத நிலையில் ஸ்ரீ சாந்த் விளக்கம்

தான் நம்பிக்கையை இழக்கவில்லை என்று ஸ்ரீ சாந்த் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள நிலையில் வருகின்ற 18-ஆம் தேதி சென்னையில் இதற்கான ஏலம் நடைபெறுகிறது.ஐபிஎல் ஏலத்திற்காக மொத்தம் 1,114 கிரிக்கெட் வீரர்கள் தங்களை பதிவு செய்திருந்தனர், இருப்பினும், 8 ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் பட்டியலிடப்பட்ட வீரர்களை சமர்ப்பித்த பின்னர் 292 வீரர்களை கொண்ட பட்டியல் வந்தது. பிசிசிஐ வெளியிட்ட தகவலின் படி, மொத்தம் 164 இந்திய வீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்கள், மற்றும் அசோசியேட் நேஷனின் 3 வீரர்கள் ஏலத்தில் விடப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வருகின்ற 18 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள 2021 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்திற்கு இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் பதிவு செய்தார்.ஆரம்ப விலை ரூ.75 லட்சம் என்று பதிவு செய்திருந்தார்.அவரது பதிவு யாரையும் ஈர்க்கவில்லை.கேரளாவை சேர்ந்த ஸ்ரீ சாந்த் கடைசியாக கடந்த 2013-ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். பின்பு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விளையாட தடை விதிக்கப்பட்டது.தற்போது அந்த தடை நீங்கியுள்ளது.
இதற்கிடையில்,ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களின் இறுதி பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்றாலும் ஸ்ரீ சாந்த் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.தனது இன்ஸ்டாகிராம் ஸ்ரீசாந்த் பதிவிட்டுள்ள வீடியோவில் , தனது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.கற்பனையின் எந்தவொரு நீட்டிப்பினாலும் தான் நம்பிக்கையை இழக்கவில்லை என்றும், மீண்டும் வருவதற்கு கடினமான முயற்சியை மேற்கொள்வேன் என்றும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025