டி20 உலகக்கோப்பை திருவிழா.! வில்லியம்சன் தலைமையில் வீரர்கள் பட்டியலை அறிவித்தது நியூசிலாந்து.!
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு தொடங்கவுள்ள டி-20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது.
டி-20 உலகக்கோப்பை தொடர், அக்டோபர் 16 இல் ஆஸ்திரேலியாவில் தொடங்க இருக்கிறது. இத்தொடருக்காக பல அணிகளும் தங்களுடைய 15 பேர் அணியை அறிவித்து வருகிறது. இந்நிலையில் டி-20 உலகக்கோப்பை தொடருக்காக நியூசிலாந்து அணி தனது அணியை நேற்று அறிவித்தது.
மூன்றாவது முறையாக டி-20 உலகக்கோப்பை தொடருக்கு கேன் வில்லியம்சன் கேப்டன் ஆக தொடர்கிறார். 2021ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியில் 3 மாற்றங்களை மட்டும் செய்து அதே அணியே இந்த தொடரிலும் விளையாடும் என அறிவித்துள்ளனர். கைல் ஜேமிசன், டோட் ஆஸ்டில் மற்றும் டிம் சீஃபர்ட் ஆகியோருக்குப் பதிலாக லாக்கி பெர்குசன், மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் ஃபின் ஆலன் ஆகியோர் இடம்பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அணியின் விவரம்: கேன் வில்லியம்சன் (C), டிம் சவுதி, இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, மார்ட்டின் கப்டில், லாச்லன் பெர்குசன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், டிரெண்ட் போல்ட், ஃபின் ஆலன்.