#SportsUpdate: 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி..!

இங்கிலாந்து அணி 15.3 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று முதல் டி20 போட்டி நடைபெற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் தவான் களமிறங்கினர்.
இந்திய அணி ஆட்டம் தொடங்கத்திலே விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர்களான கே.எல் ராகுல் 1, தவான் 4 , கோலி ரன் எடுக்காமலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர், இறங்கிய ரிஷாப் பந்த் 21 ரன்கள் எடுத்தார். இதையெடுத்து, மத்தியில் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 124 ரன்கள் எடுத்தனர். 125 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்கமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர், ஜேசன் ராய் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர், ஜோஸ் பட்லர் 28 ரன்னில் விக்கெட்டை இழக்க இதைத்தொடர்ந்து, இறங்கிய டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியாக இங்கிலாந்து அணி 15.3 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025