ஆக்லாந்து நியூசிலாந்திற்கு எதிரான முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி; 58 ரன்னில் சுருண்ட இங்கிலாந்து அணி

Default Image

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே நடந்த 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், தற்போது 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பகல்-இரவு ஆட்டமாக ஆக்லாந்து நகரில் கடந்த வியாழனன்று தொடங்கியது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வேகங்கள் டிரென்ட் போல்ட் மற்றும் டிம் சவுத்தி ஆகியோரின் அனல் பறக்கும் வேகத்தை சமாளிக்க முடியாமல் 27 ரன்னில் 9 விக்கெட்டை இழந்து திணறியது. இறுதி நிலை வீரரான கிரேக் ஓவர்டன் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 33 ரன்கள் சேர்க்க,இங்கிலாந்து அணி 20.4 ஓவர்களில் 58 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் கேப்டன் ஜோரூட், பென்ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ், மொய்ன்அலி, ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் தங்க முட்டை பெற்றனர்.நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் போல்ட் 6 விக்கெட்டும்,டிம் சவுத்தி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.இது இங்கிலாந்து அணியின் 6-வது குறைந்தபட்ச ஸ்கோராகும். இங்கிலாந்து அணி 45 ரன்னில் 1887-ம் ஆண்டு சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராகும்.கிரேக் ஓவர்டனின் இறுதிகட்ட ரன் சேர்ப்பால் தான் இங்கிலாந்து அணியின் தலைதப்பியது. இல்லையெனில் 30 ரன்னில் சுருண்டு புதிய வரலாறு படைத்திருக்கும்.நியூசிலாந்து அணி 26 ரன்னில் சுருண்டு இருந்ததே (1955) டெஸ்ட் உலகின் குறைந்த பட்ச ஸ்கோராகும்.தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி வில்லியம்சனின் நிதான ஆட்டத்தால் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது.வில்லியம்சன் 91 ரன்களும், நிக்கோல்ஸ் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஸ்டூவர்ட் பிராட் 400 :

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். தற்போது ஆக்லாந்து நடைபெறும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் டாம்லதாம் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச அளவில் 400 விக்கெட்டுக்கள் வீழ்த்தி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். தற்போது 31 வயதாகும் ஸ்டூவர்ட் பிராட் மொத்தம் இதுவரை 115 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 400விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.இதில்15 முறை 5 விக்கெட்டுக்களும், 2 முறை10 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை வீரர் முத்தையா முரளீதரன் 800 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதலிடத்திலும், 708 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் வார்னே இரண்டாவது இடத்திலும், இந்திய வீரர் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுக்கள் வீழ்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 525 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.ஸ்டூவர்ட் பிராட் 400 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்