அணிக்கு திரும்பும் அவர்கள் இருவர்..! ஆட்டம் காணுமாம் ஆஸ்திரேலியா..!கொக்கரிக்கும் கேப்டன்..!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்னிலும், இன்றுடன் முடிவடைந்த நிலையில் 2வது டெஸ்டை 366 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா கைப்பற்றி வெற்றி பெற்று இந்த தொடரை 2-0 எனக்கைப்பற்றியது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா கடந்த ஆஷஸ் தொடருக்குப்பின் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாமல் தவித்து வந்த நிலையில் இந்த வெற்றி சிறுது நம்பிக்கையை அணிக்கு அளித்துள்ளது.இதனிடையே பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் மற்றும் ஸ்மித்க்கு ஓராண்டு விளையாட தடைவிதித்து.இந்த தடை அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.எனவே அவர்கள் இருவரும் உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரின்போது அணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன் டிம் பெய்ன் அவர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வரவேற்க தயாராக இருக்கிறது. ஆஷஸ் தொடரின் வெற்றியில் ஸ்மித், வார்னர் இருவரின் ஆட்டம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.
மேலும் நீங்கள் விரும்புவது போல இருவரும் அணிக்கு திரும்பி அதிக ரன்களை குவிப்பார்கள். நாங்கள் ஆஷஸ் தொடருக்காக ஆஸ்திரேலியா இங்கிலாந்து செல்லும்போது அந்த தொடரின் வெற்றியில் இருவர்க்ளுடைய ஆட்டமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் பார்க்கிறேன்.
அவர்கள் அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன்.அணிக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். தடை முடிந்த பிறகு அணிக்கு திரும்புவர்களை வரவேற்கப்படுவார்கள். கடந்த காலத்தை போன்றே மீண்டும் அணிக்கு வெற்றியைத் தேடித்தருவார்கள் என்றார்.