நான் தான் பும்ராவை விட சிறந்தவன்! 17 வயது தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் பேச்சு!
U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி கடந்த ஜனவரி 19-ஆம் தேதி நடைபெற்றது. அதில் மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் 17 வயது பந்துவீச்சாளர் குவேனா மஃபாகா 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இதனால் இந்த போட்டியில் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
தென்னாப்பிரிக்கா திரில் வெற்றி ! ஆண்ட்ரூவின் சதம் வீணானது..!
இந்த போட்டி முடிந்த பிறகு பேசிய அவர் ” இந்த போட்டியில் 5 விக்கெட்கள் எடுப்பேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. விக்கெட் எடுத்து ஆட்ட நாயகன் விருது வாங்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பொதுவாகவே எனக்கு போட்டிகளில் விக்கெட் எடுத்துவிட்டால் அதனை எப்படி கொண்டாட வேண்டும் என்று தெரியாது.
எனவே, நான் இந்த விஷயங்களை பற்றி என்னுடைய சகோதரரிடம் கேட்டேன். அவரும் அதற்கு தெளிவான பதிலை எனக்கு சொல்லவில்லை. பிறகு எனக்கு மிகவும் பிடித்த பந்துவீச்சாளரான பும்ராவை பின் பற்ற முடிவு செய்தேன். அவரை பொறுத்தவரையில் விக்கெட் எடுத்துவிட்டார் என்றால் அவர் பெரிதாக அதனை கொண்டாடமாட்டார்.
எனவே, பும்ராவை நாம் பின்பற்றுவோம் என்று நான் அவரை பின்பற்றி வருகிறேன். உலக கிரிக்கெட்டின் சிறந்த பந்து வீச்சாளர்களில் பும்ராவும் ஒருவர். ஆனால் நான் பும்ராவை விட பந்துவீச்சில் சிறந்தவன் என்று நினைக்கிறேன்” எனவும் சிரித்துக்கொண்டே குவேனா மஃபாகா பேசியுள்ளார்.