டி-20 கிரிக்கெட்டில் அதிவேக 150 ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்க வீரர் சாதனை.!
தென் ஆப்பிரிக்காவின் டெவால்டு ப்ரீவிஸ் டி-20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்கள் அடித்து சாதனை.
தென் ஆப்பிரிக்காவின் குட்டி ஏபிடி என அழைக்கப்படும் டெவால்டு ப்ரீவிஸ், தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் சி.எஸ்.ஏ டி-20 சேலன்ஜ் (CSA T20 Challenge) தொடரில் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த தொடரில் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் 19 வயதான ப்ரீவிஸ், 52 பந்துகளில் 150 ரன்கள் அடித்து கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்துள்ளார்.
கிறிஸ் கெயில் 53 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் ப்ரீவிஸ், மொத்தம் 57 பந்துகளில் 162 ரன்கள்(13 போர்கள், 13 சிக்ஸர்கல்) அடித்து மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரை டி-20 கிரிக்கெட்டில் பதிவு செய்தார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 175 ரன்கள்(66 பந்துகள்) அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.
ப்ரீவிஸ் உதவியுடன் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 271/3 ரன்கள் எடுத்தது. 272 ரன்கள் வெற்றி இலக்காக களமிறங்கிய நைட்ஸ் அணி கடுமையாக போராடி 230 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.