25 ஆண்டுகளுக்கு பிறகு ராகுல் ட்ராவிட்டிடம் மன்னிப்பு கேட்ட தென்னாப்பிரிக்க வீரர்.!
1997 இல் நடந்த சம்பவத்துக்கு தற்போது ராகுல் ட்ராவிட்டிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஆலன் டொனால்டு.
தென் ஆப்பிரிக்கா முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும் தற்போதைய வங்கதேசத்தின் பௌலிங் பயிற்சியாளருமான ஆலன் டொனால்டு, 1997 ஆம் ஆண்டு இந்தியாவுடன் நடந்த போட்டியின் போது நடந்த சம்பவத்திற்கு தற்போது ராகுல் டிராவிட்டிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆலன் டொனால்டு அவர் விளையாடும் சமயத்தில் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்து வந்தார். எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்த ஆலன் டொனால்ட், அவ்வப்போது மற்ற நாட்டு வீரர்களுடன் வீண் விவாதங்களுடன் ஈடுபட்டு வருவார்.
அப்படி ஒரு சமயம் 1997 இல் நடந்த முத்தரப்பு தொடரின் போது டர்பனில் நடந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இடையேயான போட்டியில் ராகுல் டிராவிட் மற்றும் டெண்டுல்கர் இருவரும் விளையாடிக் கொண்டிருக்கும் போது ராகுல் திராவிடம் வரம்பு மீறி நடந்து கொண்ட சம்பவத்திற்காக தற்போது டொனால்ட் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும் தற்போது இந்தியா-வங்கதேச டெஸ்ட் தொடரின் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் -ஐ இரவு டின்னருக்கு அழைத்துள்ளார். இதற்கு ராகுல் டிராவிட்-உம், அவர் வாங்கித்தருவதாக இருந்தால் நான் வருகிறேன் என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.