#INDvsSA:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு;பந்து வீச்சில் தெறிக்க விடுமா இந்தியா?..!

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
அந்த வகையில்,இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று (ஜன.19) இந்திய நேரப்படி 2.00 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில்,போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.இந்திய ஒரு நாள் போட்டி அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா தசைப்பிடிப்பால் விலகி இருப்பதால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துகிறார்.
முன்னதாக,தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி,தற்போது ஒரு நாள் தொடரைக் கைப்பற்றி பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வெற்றி முனைப்பில் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணிகள்:
இந்தியா (பிளேயிங் லெவன்): கே.எல். ராகுல்(கேப்டன்),ஷிகர் தவான்,விராட் கோலி,ஷ்ரேயாஸ் ஐயர்,ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்),வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாக்கூர்,ரவிச்சந்திரன் அஷ்வின்,புவனேஷ்வர் குமார்,ஜஸ்பிரித் பும்ரா,யுஸ்வேந்திர சாஹல்.
தென்னாப்பிரிக்கா (பிளேயிங் லெவன்): குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), ஜன்னெமன் மலான், ஐடன் மார்க்ரம்,ரஸ்ஸி வான் டெர் டுசென்,டெம்பா பவுமா(கேப்டன்),டேவிட் மில்லர்,ஆண்டிலே பெஹ்லுக்வாயோ,மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ்,தப்ரைஸ் ஷம்சி,லுங்கி என்கிடி.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025