டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங்..!

டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தென்னாபிரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் தொடங்கிய ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் முடிந்தது.
இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், இன்று கடைசி மற்றும் 3 வது போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தென்னாபிரிக்கா அணி வீரர்கள்:
அன்னேமன் மலான், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர் ), கைல் வெர்ரைன், டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பங்களாதேஷ் அணி வீரர்கள்:
லெய்டன் தாஸ் (கேப்டன்), ஷாகிப் அல் ஹசன், முஷ்கூர் ரஹீம் (விக்கெட் கீப்பர் ), மஹ்முதுல்லா, யாசிர் அலி, அஃபிஃப் ஹுசைன், மஹ்தி ஹசன், ஷரிஃபெல் இஸ்லாம், தஸ்கின் அகமது, மொஃபாசிர் ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025