முக்கியச் செய்திகள்

ராஸ்ஸி வான் அதிரடி .. தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ..!

Published by
murugan

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று 42 வது லீக் போட்டியில்  தென்னாப்பிரிக்கா அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்தது. தொடக்க வீரர்களாக இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ் களமிறங்கினர். குர்பாஸ் சிறப்பாக விளையாட தொடங்கினர். இருப்பினும் 25 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இவர்கள்  பார்ட்னர்ஷிப் மூலம் 41 ரன் எடுத்து ஒரு தொடக்கத்தை கொடுத்தனர்.

முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த இப்ராஹிம் சத்ரான் இந்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 15 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 2 ரன் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த ரஹ்மத் ஷா நிதானமாக விளையாட, அஸ்மத்துல்லா உமர்சாய் அதிரடி காட்டினார். ரஹ்மத் ஷா 26 ரன்களில் வெளியேற அடுத்து வந்த இக்ராம் அலிகில், முகமது நபி, ரஷீத் கான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய அஸ்மத்துல்லா உமர்சாய் 90 ரன்களைத் தாண்டினார்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது. உமர்சாய் ஆட்டமிழக்காமல் சதத்தை தவறவிட்டு 97 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.  தென்னாப்பிரிக்கா அணியில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளையும், லுங்கி நிகிடி , கேசவ் மகாராஜ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.  255 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரராகவின்டன் குயின்டன் டி காக், டெம்பா பவுமா இருவரும் களமிறங்கினர். இவர்கள் இருவரும் நிதானமாக விளையாடி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான்..!

இதில் நிதானமாக விளையாடி வந்த டெம்பா பவுமா 23 ரன்  எடுத்து விக்கெட்டை இழக்க, மறுபுறம் விளையாடி வந்த குவிண்டன் டி காக் அரைசதத்தை தவறி விட்டு 41 ரன்னில் விக்கெட் பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய ஐடன் மார்க்ரம் 25, ஹென்ரிச் கிளாசென் 10 ரன்னில் விக்கெட்டை கொடுத்து பெவிலியன் திரும்பினர். மத்தியில் களம் இறங்கி டேவிட் மில்லர் வந்த வேகத்தில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி என மொத்தம் 24 ரன்கள் எடுத்து முகமது நபி ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ராஸ்ஸி வான் டெர் டுசென் நிதானமாக விளையாடி அரைசதம் பூர்த்தி செய்து 95 பந்தில் 6 பவுண்டரி , 1 சிக்ஸர் என மொத்தம் 76* ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 47.3 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும் போட்டி முடிவதற்கு முன்பே ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

4 minutes ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

1 hour ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

2 hours ago

‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…

3 hours ago

பூத் கமிட்டி கருத்தரங்கம்: கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.!

கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…

3 hours ago

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

18 hours ago