இன்று தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி மோதல் !

உலகக்கோப்பை போட்டி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை Vs ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது.முதலில் களமிறங்கிய இலங்கை அணி இறுதியாக இலங்கை 36.5 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்தது.
மழை காரணமாக Duckworth முறைப்படி 41 ஓவராக மாற்றப்பட்டு 187 இலக்காக நிர்ணயித்தனர்.பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் இறுதியாக 32.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில் இன்று இரு போட்டி நடைபெற உள்ளது.ஒரு போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி மோத உள்ளது.இப்போட்டியானது சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறும்.
மற்றோரு போட்டியில் நியூசிலாந்து Vs வங்காளதேசம் அணி மோத உள்ளது. இப்போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6 மணி அளவில் நடைபெறும்.