தென்னாப்பிரிக்கா திரில் வெற்றி ! ஆண்ட்ரூவின் சதம் வீணானது..!

ஐசிசி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையின் இரண்டாவது போட்டி மேற்கு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கு இந்திய  அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக விளையாட்டை தொடங்கி ரன்களை சேர்த்தனர் அவ்வப்போது சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தாலும் நிதானமான ஆட்டத்தையே  வெளிப்படுத்தியது.

இதனால் அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக திவான் மரைஸ் 65 ரன்களை எடுத்திருந்தார். மேற்கு இந்திய அணியின் தரப்பில் நாதன் சீலி 3 விக்கெட்டும், தேஷான் ஜேம்ஸ் மற்றும் நாதன் எட்வர்ட்ஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

கேலோ இந்தியா 2024.! எத்தனை வீரர்கள்.? எத்தனை பதக்கங்கள்.? முழு விவரம் இதோ

பின்னர் 286 இலக்கை எட்டினால் வெற்றி பெறலாம் என களமிறங்கத்தியது மேற்கு இந்திய அணி. ஆட்டத்தின் ஆரம்பம் முதல் தட்டு தடுமாறி விளையாடியது. இதனால் 73-5 என்று பரிதாபமாக இருந்தது. பின்னர் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தினர். மேற்கு இந்திய அணியின் ஜூவல் ஆண்ட்ரூ  சதம் விளாசி மறுமுனையில் போராடினார். வெற்றியின் அருகாமையில் சென்ற போது எதிர்பாராத விதமாக அவரது விக்கெட்டும் விழுந்தது.

இருப்பினும் அவர் 14 பவுண்டரி, 3 சிக்சருடன் 130 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும்  அணி  இழந்து  254 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. தென் ஆப்பிரிக்க அணியில் குவேனா மபகா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்யாசத்தில் த்ரில் வெற்றியை ருசித்தது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
hmpv virus in india
power cut image
Legislative Assembly Session
2 children HMPV virus
rn ravi sivasankar
RN Ravi - TN Assembly