இங்கிலாந்து அணி 22 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 170 ரன்கள் எடுத்து 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
உலகக்கோப்பை தொடரின் 20-வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது.
தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர்களாக டி காக் , ஹென்ரிக்ஸ் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய 2-வது பந்திலேயே டி காக் 4 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர் ஹென்ரிக்ஸ் , வான் டெர் டஸ்ஸன் இருவரும் கூட்டணி அமைக்க இவர்களின் கூட்டணியில் 121 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், வான் டெர் டஸ்ஸன் 60 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த ஹென்ரிக்ஸ் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி , 3 சிக்ஸர் உட்பட 85 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் மத்தியில் களமிறங்கிய கிளாஸன், மார்க்ரம் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்கள். மார்க்ரம் அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் 42 ரன் எடுத்து வெளியேறினார். அதிரடியாக விளையாடி வந்த கிளாசென் சதம் விளாசி 67 பந்தில் 12 பவுண்டரி , 4 சிக்ஸர் என மொத்தம் 109 ரன்கள் குவித்தார். கடைசியில் இறங்கிய யான்சன் அதிரடியாக விளையாடி 42 பந்தில் 3 பவுண்டரி , 6 சிக்ஸர் உட்பட 75*ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 399 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ரீஸ் டோப்லி 3, கஸ் அட்கின்சன் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்து அணி 400 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான் இருவரும் களமிங்க வந்த வேகத்தில் இருவரும் ஜானி பேர்ஸ்டோவ் 10, டேவிட் மலான் 6 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அடுத்து இறங்கிய ஜோ ரூட் 2, பென் ஸ்டோக்ஸ் 5 ரன் எடுத்து பெவிலியன் திரும்பி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 38 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்தது. அடுத்து இறங்கிய ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் கூட்டணி சற்று விளையாட தொடங்கியபோது அவர்களின் கூட்டணியை ஜெரால்ட் கோட்ஸி பிரித்தார். ஜெரால்ட் கோட்ஸி வீசிய 11 ஓவரில் முதல் பந்தில் ஜோஸ் பட்லர் 15 ரன்னிலும், 3 பந்தில் ஹாரி புரூக் 17 ரன்னிலும் அடுத்தடுத்து இருவரும் விக்கெட்டை இழந்தார்கள்.
பின்னர் வந்த அடில் ரஷித் , டேவிட் வில்லி நிலைத்து நிற்காமல் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் ஜோடி சேர்ந்த கஸ் அட்கின்சன், மார்க் வுட் நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடி ரன்கள் சேர்த்தனர். இவர்கள் கூட்டணியில் 70 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் கஸ் அட்கின்சன் 35 ரன்னில் போல்ட் ஆனார். மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த மார்க் வுட் 17 பந்தில் 5 சிக்ஸர் , 2 பவுண்டரி விளாசினார். இறுதியாக இங்கிலாந்து அணி 22 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 170 ரன்கள் எடுத்து 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தென்னாபிரிக்கா அணியில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டையும், மார்கோ ஜான்சன் , லுங்கி நிகிடி தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…