டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

South Africa squad

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு.

ஐசிசியின் டி20 உலகக்கோப்பை 2024 தொடர் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த சூழலில் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட வீரர்களை நாளைக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்திருந்தது. அதன்படி, ஒவ்வொரு அணியாக தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று கேம் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அறிவிக்கப்பட்டது.

அதேசமயம் இந்திய அணியும் இன்று அறிவிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி:

எய்டன் மார்க்ரம் (c), ஒட்னியல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ஜார்ன் ஃபார்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested