2-வது டெஸ்ட்: இந்தியாவிற்கு 79 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா..!

Published by
murugan

தென்னாப்பிரிக்கா இந்தியா அணிகளுக்கு இடையே நேற்று முதல் 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 23.2 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் முகமது சிராஜ் 6 விக்கெட்களையும், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்களையும் பறித்தனர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34.5 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரோகித் 39 ரன்கள், சுப்மன் கில் 36 ரன்கள், விராட் 46 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணியில் நந்த்ரே பெர்கர், லுங்கி நிகிடி , ரபாடா தலா 3 விக்கெட்டை பறித்தனர். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்கள் முன்னிலையில் இருந்நிலையில், தென்னாபிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.

தொடங்க வீரர்களாக டீன் எல்கர் , ஐடன் மார்க்ராம் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் டீன் எல்கர் 12 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் , டேனி டி ஜோர்ஜி தலா 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால், முதல் நாள் முடிவில் தென்னாபிரிக்க அணி 17 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை பறிகொடுத்து 62 ரன்கள் எடுத்து களத்தில் ஐடன் மார்க்ராம் 36*, டேவிட் பெடிங்கம் 7* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே களத்தில் இருந்த டேவிட் பெடிங்கம் 11 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த மார்கோ ஜான்சன் மட்டும் 11 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒன்றை இலக்கில்  ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து இழந்தனர். அதன்படி  கேசவ் மகாராஜ் 3,  ககிசோ ரபாடா 2, லுங்கி நிகிடி 8 ரன்கள் எடுத்தனர். இருப்பினும் ஐடன் மார்க்ராம் மட்டும் நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடி 103 பந்தில் சதம் விளாசி 106 ரன்கள் எடுத்தார். இதில் 17 பவுண்டரி, 2 சிக்ஸர் அடங்கும்.

இறுதியாக தென்னாபிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.  இதனால் தென்னாபிரிக்க அணி 78 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி  தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கவுள்ளது. இந்திய அணியில் பும்ரா 6 விக்கெட்டையும், முகேஷ் குமார் 2 விக்கெட்களையும், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டையும்  பறித்தனர்.

Published by
murugan

Recent Posts

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

2 hours ago

உக்ரனை அடுத்து ஈரான்? அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட வேண்டும். இல்லையென்றால்? டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…

2 hours ago

INDvsNZ : தடுமாறும் நியூசிலாந்து! பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

3 hours ago

4 மாவட்டங்களில் மிக கனமழை! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…

6 hours ago

சாமி இந்தியா ஜெயிக்கணும்.., மும்பை, உஜ்ஜயினி, லக்னோ கோயில்களில் சிறப்பு பூஜைகள்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…

7 hours ago

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முக்கிய 3 முடிவுகள்.! 7 மாநிலங்களில் 29 கட்சிகளுக்கு முதலமைச்சர் கடிதம்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…

8 hours ago