SAvAFG : நிலைத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா! ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 316 டார்கெட்!
சாம்பியன் டிராபியின் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்துள்ளது.

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பாகிஸ்தான் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது. ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் நிலைத்து ஆடி 106 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 103 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டெம்பா பவுமா 58 ரன்களும், ரஸ்ஸி வான் டெர் டுசென் 52 ரன்களும், டோனி டி ஜோர்ஜி 11 ரன்களும், டேவிட் மில்லர் 14 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.
ஏடன் மார்க்ரம் இறுதி வரை அட்டமிழக்காமல் 36 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 52 ரன்கள் எடுத்தார். 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளையும், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, அஸ்மதுல்லா உமர்சாய் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபி விளையாடும் ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றிபெற 50 ஓவர்களில் 316 ரன்கள் எடுக்க வேண்டும்.