தென் ஆப்பிரிக்கா ப்ரீமியர் லீக் 2023… 6 அணிகளை தட்டி தூக்கிய ஐ.பி.எல் அணிகள்… சென்னை, மும்பை, டெல்லி…
தென் ஆப்பிரிக்கா நாட்டில் கிரிக்கெட் பிரிமியர் லீக் நடைபெற உள்ளது. அதில் முக்கிய அணிகளை சென்னை, மும்பை, ராஜஸ்தான், லக்னோ, டெல்லி, ஹைதிராபாத், ஆகிய ஐபிஎல் அணிகள் வாங்கியுள்ளது.
இந்தியாவில் பிரபலமாக உள்ள கிரிகெட் தொடர்களில் மிக முக்கியமானது ஐ.பி.எல். இது இந்திய அளவில் அல்ல உலக அளவில் மிக பிரபலம்.
அதனால் தான் அதனை கொண்டு மற்ற நாடுகளும் தங்கள் நாடுகளில் பிரீமியர் லீக் போட்டிகளை நடத்த ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் , தென் ஆப்பிரிக்கா நாடும் தங்கள் நாட்டில் இந்த போட்டியை நடத்த உள்ளது.
இதில் உள்ள 6 அணிகளை இந்தியன் பிரிமியர் லீக் அணிகளான சென்னை , மும்பை போன்ற அணிகள் நிர்வாகம் வாங்கியுள்ளது. ஜெகனேஷ்பார்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியும், டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், போர்ட் எலிசபத் அணியை சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியும், பிரிட்டோரியா அணியை டெல்லி கேபிடல்ஸ் அணியும், பார்ல் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வாங்கியுள்ளது.
2023 ஜனவரியில் இந்த தொடர் ஆரம்பிக்கப்பட உள்ளது. முன்னாள் தென் ஆபிரிக்க அணியின் வீரர் கிரீம் ஸ்மித் தலைவராக உள்ளார்.