இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி மோதியது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் தென் ஆப்ரிக்கா அணியின் தொடக்க வீரர்களான குவின்டன் டி காக், ஹாஷிம் அம்லா இருவரும் களமிறங்கினர்.இருவரும் ஆட்டம் தொடக்கத்திலே குவின்டன் டி காக் 10 ரன்னில் , ஹாஷிம் அம்லா 6 ரன்னில் வெளியேறினர். இறுதியாக 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர். தென்ஆப்ரிக்கா அணியில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 42 ரன்கள் எடுத்தார்.
பின்னர் 228 ரன்கள் இலக்குடன் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஷிகார் தவான் ,ரோஹித் சர்மா களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் 8 ரன்களில் ஷிகார் தவான் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய கோலி 18 ரன்னிலும் ,ராகுல் 26 ரன்னிலும் வெளியேறினார். பின் களமிறங்கிய தோனி உடன் கூட்டணியில் நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் அடித்தார்.
இறுதியாக இந்திய அணி 47.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மேலும் தென் ஆப்ரிக்கா அணி விளையாடிய மூன்று போட்டியிலும் தோல்வியடைந்தது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…