தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது!
இன்றைய போட்டியில் இலங்கை , தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளது. இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள்:
ஹாஷிம் அம்லா, குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), ஃ டு பிளெசிஸ் (கேப்டன்), ஐடன் மார்க்ராம், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஜீன்-பால் டுமினி, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ், கிறிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா, இம்ரான் தாஹிர் ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.
இலங்கை அணி வீரர்கள்:
திமுத் கருணாரத்ன (கேப்டன்), குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, திசாரா பெரேரா, ஜீவன் மெண்டிஸ், இசுரு உதனா, லசித் மலிங்கா, சுரங்க லக்மல் ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.