99 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா, குல்தீப் யாதவ் அபார பந்துவீச்சு!!
இந்தியாவிற்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் தென்னாபிரிக்க அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தொடர் 1-1 என்ற நிலையில் இன்று தொடரை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி டெல்லியில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில்பௌலிங் தேர்வு செய்தது.
அதன் படி முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியால் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 99 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அந்த அணியில் க்ளாஸென் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும், சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.