டி20I சூப்பர 8: டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய சூப்பர் 8 சுற்று போட்டியில் B- பிரிவின் கடைசி போட்டியாக வெஸ்ட் இண்டிஸ் அணியும், தென்னாபிரிக்கா அணியும் அன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் வைத்து மோதியது.
இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகமுக்கியமான போட்டியாகும் இதில் வெற்றி பெரும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும், ஏற்கனவே இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றிறுந்த நிலையில், இந்த பிரிவில் அடுத்ததாக தேர்வாக போகும் அணிக்கான போட்டி தான் இது.
நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறமாகிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் எதிர்பார்த்த யாரும் விளையாடாமல் சொதப்பினார்கள்.
இருபின்னும் மாறாக ரோஸ்டன் சேஸ்ஸும், மேயர்ஸ்ஸும் நின்று விளையாடினார்கள். இருவரில், ரோஸ்டன் சேஸ் 42 பந்துக்கு 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், அதே போல மேயர்ஸ்ஸும் 35 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனால், 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டை இழந்து 135 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து, எளிய இலக்கை எடுப்பதற்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 2-வது ஓவரில் அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தனர்.
மேலும், தொடர்ந்து விளையாடும் பொழுது மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் மழை நின்றவுடன் போட்டி மீண்டும் தொடங்கியது அப்போது DLS விதிப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டு, ரன்கள் நிர்ணயிக்க பட்டது.
அதன்படி DLS விதிப்படி 17 ஓவர்கள் குறைக்கப்பட்டு, 123 ரன்களை இலக்காக நிர்ணயிக்கபட்டது. இதனால், மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது, மழைக்கு பிறகு விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.
அதன்பிறகு 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மில்லரும், ஸ்டப்ஸும் தட்டி தட்டி ரன்களை சேர்த்தனர். அதில் மில்லர் 4 ரன்களுக்கும், ஸ்டப்ஸ் 29 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இத்தனை பந்துகளுக்கு, இத்தனை ரன்கள் என விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் இரண்டு பக்கத்திலும் கை ஓங்கி உள்ளது. மேலும், கடைசி ஓவரில் தென்னாபிரிக்கா அணிக்கு 6 பந்துக்கு 5 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது.
அந்த ஓவரை எதிர்கொண்ட யான்சென், மேக்காய்யின் முதல் பந்தை சிக்சருக்கு அடித்து தென்னாபிரிக்கா அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் தென்னாபிரிக்கா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் (DLS) த்ரில் வெற்றியை பெற்றது.
மேலும், இந்த வெற்றியின் மூலம் அரை இறுதிக்கு தகுதி பெற்றும் அசத்தி இருக்கிறது. நடைபெற்று வரும் இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இது வரை தென்னாபிரிக்கா அணி தோல்வியை காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…