அடுத்தடுத்து 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வரும் தென்னாப்பிரிக்கா..!
நடப்பு ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் 36 லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 101* ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும், ரோஹித் சர்மா 40 ரன்களும் எடுத்துள்ளார்கள்.
தென்னாப்பிரிக்கா அணி 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக தேம்பா பாவுமா, குயிண்டன் டி காக் களமிறங்கினர். ஆட்டம் முதல் இருவரும் நிதானமாக விளையாட தொடங்கினர். ஆனால் இன்றைய போட்டியில் 2 ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் நடப்பு உலககோப்பையில் 4 சதங்கள் விளாசி அதிரடி காட்டி வந்த தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து ராஸ்ஸி வான் டெர் டுசென் களமிறங்கினர். இருப்பினும் மறுபுறம் விளையாடி வந்த தொடக்க வீரர் தேம்பா பாவுமா ஜடேஜா வீசிய முதல் ஓவரில் 11 ரன் எடுத்து போல்ட் ஆனார். பின்னர் ஐடன் மார்க்ராம் களமிறங்க வந்த வேகத்தில் ஷமி ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்தார். பின்னர் அடுத்த பந்திலே ஷமி வீசிய பந்தை விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்சை கொடுத்து 9 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் 11 பந்தில் வெறும் 1 ரன் எடுத்து ஜடேஜா ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் களத்தில் இருந்த ராஸ்ஸி வான் டெர் டு அவுட் ஆனார். இதனால் தென்னாபிரிக்கா அணி 13 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 40 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் ஷமி , ஜடேஜா தலா 2 விக்கெட்டையும், சிராஜ் 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.