சவுரவ் கங்குலி, ஜெய் ஷா ஆகியோர் பிசிசிஐ பதவிகளில் தொடரலாம் – உச்சநீதிமன்றம்
பிசிசிஐ யின் அரசியலமைப்பை திருத்த உச்ச நீதிமன்றம் அனுமதித்ததையடுத்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் நீட்டிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அதன் தலைவர், செயலாளர், உட்பட பணியாளர்களின் பதவிக்காலம் தொடர்பாக அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2018 இல் நடைமுறைக்கு வந்த பிசிசிஐயின் மறு வரைவு சட்ட திருத்தத்தின் படி,ஒரு பதவியில் இருப்பவர்/நிர்வாகி ஒரு மாநில சங்கத்திலோ அல்லது பிசிசிஐயிலோ அல்லது இரண்டின் கலவையாகவோ இரண்டு தொடர்ச்சியான காலங்களை (ஆறு ஆண்டுகள்) முடித்த பிறகு மூன்று வருட கூலிங்-ஆஃப் காலத்தை மேற்கொள்ளலாம்.