பாகிஸ்தானுடன் இனி எந்த ஒரு விளையாட்டு நிகழ்வும் வேண்டாம்- சவுரவ் கங்குலி
- ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டும் அல்லாமல் இனிமேல் ஹாக்கி, கால்பந்து போன்ற எந்த ஒரு விளையாட்டு நிகழ்விலும் அவர்களுடன் நாம் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார் சவுரவ் கங்குலி.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதனால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது.இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் சாதித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் மீது கடுமையான கோபத்துடனும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இது குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியதாவது.
இந்த தாக்குதல் ஒரு மோசமான நிகழ்வாகவும். இனிமேல் இந்த இரு நாடுகளுக்கு இடையில் எவ்வித தொடர்பும் இருக்கக்கூடாது. பாகிஸ்தானுடன் தற்போது நாம் கிரிக்கெட் மட்டும் விளையாடுவதில்லை. இனிமேல் ஹாக்கி, கால்பந்து போன்ற எந்த ஒரு விளையாட்டு நிகழ்விலும் அவர்களுடன் நாம் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார் சவுரவ் கங்குலி.