இந்தியா நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறும், இறுதிப்போட்டிக்கும் செல்லும் – சவுரவ் கங்குலி
இந்தியா டி-20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறி இறுதிப்போட்டிக்கும் செல்லும் என்று கங்குலி கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று கிட்டத்தட்ட முடிவடையும் நிலைக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று இன்னும் முடிவாகவில்லை.
இந்த நிலையில் முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும் மற்றும் இறுதிப்போட்டிக்கும் கூட முன்னேறும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, இந்தியா ஒரு போட்டியில் தான் தோல்வி அடைந்திருக்கிறது, ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இந்தியா நிச்சயயமாக அரையிறுதிக்கு தகுதி பெற்று இறுதிப்போட்டிக்கும் முன்னேறும். இந்திய அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இன்று இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் அடிலெய்டில் மோதுகின்றன.