சில நேரங்களில் உண்மை, சில நேரங்களில் நடிப்பு.. ஓப்பனாக பேசிய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான்!

Mohammad Rizwan

உலகக்கோப்பை தொடரின் நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியின்போது தனக்கு ஏற்பட்ட தசைபிடிப்பு குறித்த கேள்விக்கு பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஓப்பனாக பதிலளித்துள்ளார். ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று, ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில், இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்களை இலங்கை அணி குவித்தது. இதில், அதிரடியாக விளையாடிய குசல் மெண்டிஸ்  77 பந்துகளில் 14 பவுண்டரிகள், 6 சிக்ஸர் என மொத்தம்  122 ரன்கள் குவித்தார். இதுபோன்று, தீர சமரவிக்ரம நிதானமாக விளையாடி 89 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர் என 108 ரன்கள் எடுத்தார். இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 4 விக்கெட் இழந்து 345 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில், தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் 103 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தானின் நட்சத்திர வீரரான முகமது ரிஸ்வான் 121 பந்துகளில் 131 ரன்கள் அடித்து அணி பெற உதவினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை லீக் போட்டியில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை நிர்ணயித்த 345 ரன்களை 48.2 ஓவர்களில் எட்டி, 48 ஆண்டுகால உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன் சேஸ் என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது.

இதனிடையே, இலக்கை நோக்கி செஸ் செய்யும்போது பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஆனால், அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு ரிஸ்வான் தொடர்ந்து விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். பாகிஸ்தானின் சேஸ் சாதனைக்கு  முக்கிய காரணம் முகமது ரிஸ்வான் என்றே கூறலாம்.  இருப்பினும், நேற்றைய போட்டியில் உண்மையாக முகமது ரிஸ்வானுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதா உண்மையா அல்லது நடிக்கிறாரா என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியின்போது தனக்கு ஏற்பட்ட தசைபிடிப்பு குறித்த கேள்விக்கு ஓப்பனாக பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் பதிலளித்துள்ளார். அதாவது, போட்டியின் இடையில் எனக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது உண்மைதான், அதேநேரம் சில சமயங்களில் நான் நடித்தேன் என கூறியுள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, ரிஸ்வான் கூறுகையில், நாட்டிற்காக விளையாடுவது பெருமையான தருணம். அதுவும், நமது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது நாம் பெருமை கொள்ள வேண்டும்.  அந்த வகையில் அணியின் வெற்றிக்கு பங்காற்றியதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

இப்போது பேசுவதற்கு என்னிடம் வார்த்தை இல்லை, அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. பந்துவீச்சுக்கு பிறகு இந்த இலக்கை அடைய முடியும் என எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்தோம். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் பாபர் ஆசாமை முன்கூட்டியே அவுட்டாக்கினர். தொடக்கத்திலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டை இழந்தோம். ஆனால், அதன் பிறகு எங்களுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்தது.

இந்த ஆட்டத்தில் நாங்கள் பேட்டிங் செய்யும் போது ஆடுகளம் சற்று வித்தியாசமாக சாதகமாக இருந்தது. அதனால், அப்துல்லாவிடம் சேசிங்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம் என்று கூறி அவருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தேன். இந்த போட்டியின் இடையில் எனக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது உண்மைதான், அதேநேரம் சில சமயங்களில் நான் நடித்தேன் என சிரித்துக்கொண்டே ஓப்பனாக தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்